விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சமீபத்தில், நடிகர் சங்க வளாகத்தில், தான் நடிக்கும் மூன்று படங்களுக்கான பூஜை போட்டார் கமல். அதில் ஒன்று, சபாஷ் நாயுடு என்ற காமெடி படம். ஏற்கனவே, தசாவதாரம் படத்தில், பல்ராம் நாயுடு வேடத்தில் நடித்தவர், மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, படம் முழுக்க இக்கதாபாத்திரமே இடம் பெறுவதால், சிரிப்புக்கு, நூறு சதவீதம் கியாரண்டி... என்றும் கூறுகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தான், சபாஷ் நாயுடு என்ற தலைப்பை வைக்குமாறு சொன்னதாக கூறும் கமல், இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராவதாகவும் கூறினார்.
— சினிமா பொன்னையா