ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெபி ஸ்டூடியோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் தேன் மிட்டாய். இதில் ராம் சரவணன், கோவிந்த், குணா, மோகன், ரவி என்ற 5 ஹீரோக்களும், மைலா, பாரதா, ஹன்சா, சுசித்ரா, பூஜா, வினோ ஸ்ரீ என்ற 6 ஹீரோயின்களும் அறிமுகமாகிறார்கள். வே.கலைவேந்தன் என்ற புதுமுகம் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறர். ஜே.சேவியர் இசை அமைக்கிறார்.
“இது புதுமுகங்கள் நடிக்கும் யதார்த்த காதல் சினிமா. கிராமமும், நகரமும் சார்ந்த கதை. எல்லோருக்குமே முதல் காதல் என்ற ஒன்று அவசியம் இருக்கும். அது சிலருக்கு வெற்றியாக இருந்திருக்கும், சிலருக்கு தோல்வியாக இருந்திருக்கும் இப்படியாக 5 இளைஞர்களுக்கு வரும் முதல் காதல் பற்றிய படம். ஒரே ஒரு பெண் காதலே வேண்டாம் என்று இருப்பவள். இப்படி விதவிதமான யதார்த்தமான காதலை யதார்த்தமான சூழ்நிலைகளோடு சொல்கிறோம். இன்றைக்கு மக்கள் எதிர்பார்ப்பது அழகான, வலுவான கதையைத்தான். அதை நம்பியே தேன் மிட்டாயை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயம் ரசிகர்களுக்கு இணிக்கும்” என்கிறார் இயக்குன் கலைவேந்தன்.