ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இருக்கும் நடிகர்களில் யதார்த்தமான நடிப்பை வழங்குவதில் கெட்டிக்காரர் இர்பான்கான். இவர் 'டிவைன் லவ்வர்ஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கங்கனா ரணாவத் நடிப்பதாக இருந்தது. ஆனால் சிலதினங்களுக்கு முன்னர் கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகியதாகவும் அவருக்கு பதில் ஜரின்கான் இப்படத்தில் நடிப்பதாகவும் செய்தி வந்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள இர்பான்கானிடத்தில் ஏன் கங்கனா நடிக்கவில்லை என்று கேட்டபோது அவர் கூறியதாவது... ''டிவைன் லவ்வர்ஸ் எப்போது உருவாகும் என்று தெரியவில்லை. அதுமுட்டுமல்ல இன்றைய சூழலில் கங்கனாவுடன் நடிப்பது சாத்தியமில்லை. அவர் இன்று ஹீரோ ரேஞ்சுக்கு தன்னுடைய ரோலை எதிர்பார்க்கிறார். ஹீரோவே ஒரு படத்தில் நடித்தாலும் கங்கனாவிற்கு முன்னால் அவர் துணை நடிகராகத்தான் தெரிவார். நல்ல கதை அமைந்தால் கங்கனா ஹீரோவாகவும், நான் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாகவும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.