ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூர்யா,சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கிய 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் திரைக்கு வந்து வசூலில் லாபம் பார்த்து வருகின்றது. தமிழுக்கு நிகராக தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 24 படமும் டோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அண்மையில் இப்படத்தைப் பார்த்த டோலிவுடின் ஸ்டையில் ஹீரோ அல்லு அர்ஜூன் இயக்குனர் விக்ரம் குமார் மற்றும் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக இப்படத்தின் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவாளர் திருவின் காமிரா ஜாலங்களையும் வியந்து கூறிய அல்லு அர்ஜூன் சூர்யாவின் நடிப்பையும் பாராட்டி கூறியுள்ளார். அமெரிக்காவில் 24 படத்தின் வசூல் ஒரே வாரத்தில் 1 மில்லியனை தாண்டியுள்ளது.