தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர்குட் ஃபிலிம்ஸ் 88 ஆவது தயாரிப்பாக தற்போது தயாரித்து வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இப்படத்தை இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் நடித்த கேத்ரின் தெரஸா இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதைக்களம் அடர்ந்த காடுகளாம். இப்படத்தில் ஆர்யா 'கடம்பன்' என்ற மலைவாழ் இளைஞன் கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடம்பை கட்டுமஸ்தாக உருவாக்கி வைத்திருக்கிறார். கொடைக்கானலில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.
தேர்தலுக்குப் பிறகு இம்மாத இறுதியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்திற்கு 'தனிக்காட்டு ராஜா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலில் செய்திகள் வந்தன. தற்போதைய தகவலின்படி, ஆர்யாவின் கேரக்டர் பெயரான 'கடம்பன்' என்ற பெயரையே தலைப்பாக வைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறதாம். கிறிஸ்துமஸ் வெளியீடாக கடம்பன் படத்தை ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.