'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் பிரபு நடித்த 'வெள்ளக்கார துரை' படத்திற்கு பிறகு எழில் இயக்கியுள்ள படம் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடிக்கும் இப்படத்தை இயக்குநர் எழில் உடன் இணைந்து விஷ்ணு விஷாலும், அவரது மனைவி ரஜினி நட்ராஜும் தயாரித்துள்ளனர். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான முன் ஏற்பாடாக, நேற்று இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்த கட்டும் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, அனைத்து வயதினரும் பார்க்க கூடிய படம் என்று 'யு' சர்ட்டிஃபிகேட் வழங்கியிருக்கிறது தணிக்கைக்குழு. இரண்டு மணி நேரம்19 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கு வரி சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படக்குழுவினர்.
ஜூன் 3-ஆம் தேதி இப்படம் வெளியாகவிருப்பதை அடுத்து படத்தின் புரமோஷன்வேலையை துவக்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் நாயகியான நிக்கி கல்ராணி அடுத்த வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால் தன்னால் புரமோஷனுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். எனவே விஷ்ணுவிஷால் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்.