இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இசையமைப்பாளராக இருந்த ஜிவி.பிரகாஷ் குமார், திடீரென ஹீரோவாக அவதரித்த படம் பென்சில். மணிநாகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இந்தப்படம் வெளிவர சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அதன்பின்னர் ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்று அவரை பிரபலமாக்கிவிட்டது. தற்போது புருஸ்லீ, எனக்கு இன்னோரு பேரு இருக்கு உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் ஜிவி.
இந்நிலையில் நீண்டநாட்களாக கிடப்பில் கிடந்த பென்சில் இப்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. நாளை(மே 13ம் தேதி) இப்படம் வெளிவர இருக்கிறது. இதனிடையே பென்சில் படம் பள்ளியில் நடக்கும் பல சம்பவங்களை தோலுரித்து காட்ட உள்ளதாம். இதனால் சில தனியார் பள்ளிகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், பென்சில் படம் திட்டமிட்டப்படி நாளை வெளிவரும் என்று கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் மணிநாகராஜ்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛யாராலும் எழுதி கொடுத்து வாங்க முடியாதது கல்வி. அத்தகைய கல்வியில் கற்று கொடுக்கும் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் பார்க்கும்போது கண்டிப்பாக ஒருவித உணர்வு ஏற்படும். பள்ளி மாணவர்களாக ஜிவிபிரகாஷ்குமாரும், ஸ்ரீதிவ்யாவும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். திட்டமிட்டப்படி நாளை பென்சில் படம் வெளிவரும், அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று கூறியுள்ளார்.