பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிம்பு எழுதும் பாடல்கள் பொதுவாகவே கொஞ்சம் ஒருமையில்தான் இருக்கும். அந்த வகையில், எவன்டி உன்னை பெத்தான் பெத்தான், கையில் கெடைச்சான் செத்தான் செத்தான், லூசு பெண்ணே... என பல அதிரடியான பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். அதேபோல் பீப் சாங்கில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றன. இந்த நிலையில், சமூக நோக்கத்துடன் வோட் சாங் -என்றொரு பாடலை ரெடி பண்ணியிருக்கிறார் சிம்பு. அனைவரும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப்பாடலை உருவாக்கியுள்ளார் சிம்பு.
போடுங்கம்மா வோட்டு அதுக்கு இந்த பாட்டு...
ஓட்டுப்போட வேண்டியது நம்மோட கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனால்தான் நம் நாட்டுக்கு இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னன்னு நீ நினப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயேதான் தடுப்ப...
என்பது போன்று அந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. சிம்புவுடன் இணைந்து விடிவி கணேஷ் இந்தப்பாடலை பாடியிருக்கிறார். சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்பாடல் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்ல இந்தப்பாடல் இப்போது டிரெண்டிங்காவும் மாறி உள்ளது.
மேலும் இந்தப்பாட்டின் பின்னணியில் தெரியும் போட்டோவில் பொதுமக்களுடன் நடிகர் அஜித் வரிசையில் நின்று ஓட்டு போடும் போட்டோவையும் இணைத்து அஜித் ரசிகர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறார் சிம்பு. இன்னொரு போட்டோவில் கமலும், கவுதமியும் ஓட்டு போட்ட போட்டோவும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்தப்படம் ஹைலைட்டாக அமையவில்லை.