டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் சாய் கபீர், 'டிவைன் லவ்வர்ஸ்' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இர்பான் கானும், கங்கனா ரணாவத்தும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது கங்கனா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜரின்கான் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் சாய் கபீர் கூறியிருப்பதாவது... ''கங்கனா என்னுடைய சகோதரி போன்றவர். கால்ஷீட் பிரச்னையால் கங்கனா இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எங்களுக்கு இப்பவே படத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழல். கங்கனாவிற்கு பதிலாக ஜிரின்கான் இப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு அவர் நிச்சயம் பொருத்தமாக இருப்பார். 'டிவைன் லவ்வர்ஸ்' படத்தில் நடிக்கும் முன்பாக அந்த கேரக்டருக்காக அவர் இரண்டு மாதம் பயிற்சி எடுக்க உள்ளார். த்ரில்லர் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாக இருக்கிறது, செப்டம்பர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார்.