'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
வடிவேலு பாடி லாங்குவேஜை வைத்து காமெடி செய்து வந்த நிலையில், சந்தானம் டயமிங் காமெடியை வைத்து முன்னணி காமெடியனாக உயர்ந்தார். இப்போது ஹீரோவாகி விட்டார். என்றாலும், தனது காமெடி பாணியை அவர் விடவில்லையாம். நாயகனாக நடித்து வரும் படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித் திருக்கிறாராம். மேலும், எப்போதுமே இளைஞர்கள் பேசும் வார்த்தைகளை எடுத்து உல்டா பண்ணி பேசுவதுதான் சந்தானத்தின் ஸ்பெசாலிட்டியாக இருந்தது வந்தது.
இந்நிலையில், இப்போது அவர் அதிலிருந்து கொஞ்சம் மாறியிருக்கிறாராம். அதாவது, அவருக்கு லொள்ளு சபா நண்பர்கள் 15 பேர் இருக்கிறார்களாம். அவர்களிடம் அதிகமாக டிஸ்ஷசன் செய்யும் சந்தானம், அவர்களின் பாடிலாங்குவேஜையும் எடுத்து தனது பாணியில் அவுட்புட் கொடுத்து வருகிறாராம். அந்த வகையில், ஹீரோவாக நடித்து வரும் படங்களில் சந்தானத்திடம் மாறுபட்ட பாடிலாங்குவேஜை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். அதுமட்டுமின்றி, முனபு லோக்கர் பசங்க பேசும் வார்த்தைகளை கேட்ச் பண்ணி ரிப்பீட்டு கொடுத்த சந்தானம், தற்போது கல்லூரி இளைஞர்கள் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்வது போலவும் சில காட்சிகளை பயன்படுத்தி அவர்கள் பேசும் வார்த்தைகளையும் அதிகமாக பயன்படுத்தி வருகிறாராம்.