புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் அதிர்ச்சிதோல்வி காரணமாக, கபாலி படத்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குமோ என்கிற அச்சம் சம்பந்தப்பட்ட படக்குழுவினரிடம இருந்து வந்தது. ஆனால், கபாலி டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக ஆதரவு காரணமாக அப்படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. அதோடு, கபாலி உலக அளவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், இதுவரை ஜூன், ஜூலையில் கபாலி வெளிவரும் என்று கூறி வந்தவர்கள், இப்போது ஜூலை மாதம் 1-ந்தேதியில் கபாலியை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். அதனால், முக்கியத்துவம் வாய்ந்த தியேட்டர்களை புக் பண்ணும் வேலைகள் இப்போது தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, விஜய்-அஜீத் படங்களை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் கபாலியை வெளியிடும் வேலைகள் நடப்பதோடு, அவரது ரசிகர் மன்றங்களும் மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சில ஏரியா ரஜினி ரசிகர்கள் கபாலி ரஜினியின் பிரமாண்டமான கட்அவுட்கள் வைக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்களாம்.