எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். எப்பேற்பட்டவராக இருந்தாலும் சென்ட்டிமெண்ட்டுக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டார்கள். இதற்கு விஷ்ணு விஷாலும் விதிவிலக்கில்லை. அவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
'வெள்ளக்கார துரை' படத்திற்கு பிறகு எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்1விஷால் உடன் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை துவங்கியுள்ளனர். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த தேதியை தேர்வு செய்தது இயக்குநர் எழில் அல்ல, ஹீரோ கம் புரட்யூசரான விஷ்ணு விஷால்தான்.
காரணம்... விஷ்ணு விஷாலை பொறுத்தவரை ஜூன் மாதம் அவருக்கு ராசியான மாதமாம்! அவர் நடித்த 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. அதைப் போல அவர் நடித்த 'இன்று நேற்று நாளை' திரைப்படமும் 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் வெளியானது.
ஜூன் மாதங்களில் வெளியான இந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்ததால் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன்' படத்தையும் ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார் விஷ்ணுவிஷால்! இதில் என்ன சோகம் என்றால், அவருக்கு வெற்றிப்படங்களைக் கொடுத்த சி.வி.குமாரின் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜின் 'இறைவி' படமும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாவதுதான். இன்னொரு பக்கம், ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படமும் ஜூன் 3-ஆம் தேதி திரைக்கு வருகிறது.