மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ஆரோகணம், சார்லஸ் செபி கார்த்திகா, மையம் போன்ற படங்களில் நடித்தவர் ஜெய்குஹெய்னி. சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் பீல்டுக்குள் இவர் என்ட்ரி ஆனார். அதற்கேற்ப நல்ல கதைகள், கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடித்தார். ஆனால் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அதனால் மார்க்கெட்டில் இன்னும் பேசப்படும் நடிகையாகவில்லை அவர்.
இந்த நிலையில், முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தால் பெரிய நடிகையாகி விடலாம் என்பதற்காக முன்னணி நடிகர்களை வைத்து படமெடுக்கும் டைரக்டர்களிடம் படவேட்டை நடத்தியிருக்கிறார் ஜெய் குஹெய்னி. ஆனால், இவரது உடல்கட்டை பார்த்து விட்டு கவர்ச்சிகரமான கதாநாயகியாக நடிக்க மட்டுமே சான்ஸ் கொடுக்க முன்வந்தார்களாம். ஆனால், அவருக்கோ கவர்ச்சி காட்டி நடிப்பதில் ஆர்வம் இல்லையாம். அதனால் கைக்கு எட்டிய சில முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளை நழுவ விட்டு விட்டதாக சொல்லும் ஜெய் குஹெய்னி, அடுத்தபடியாக ஆக்சன் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டப்போவதாக சொல்கிறார்.