ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் தயாரித்து நடித்துள்ள படம் பிரகாமியம். பிரதாப் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார், முத்துப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜ் மற்றும் கிறிஸ்டோபர் இசை அமைத்துள்ளனர் இயக்குனர் பிரதாப்பே ஹீரோவாகவும் நடித்துள்ளார், சுபா மற்றும் பார்வதி ஹீரோயினாக நடித்துள்ளனர். இது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்கிறது. அவர் என்ன ஆகிறான் என்கிற கதை.
இதன் பாடல் வெளியீட்டு விழா நடிகர் சங்கத்தில் நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் பாடல்களை வெளியிட, பொதுச்செயலாளர் விஷால் பெற்றுக் கொண்டார். பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் டி.பி.கஜேந்திரன், சோனியா, ராம்கி, நந்தா, தளபதி தினேஷ், ஸ்ரீமன், பிரேம்குமார், ஹேமச்சந்திரன், ரமணா, பிரசன்னா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.