சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மலையாள சினிமாவில் தனக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமல் லைம்லைட்டிலேயே இருக்கிறார் மம்தா மோகன்தாஸ். இடையில் கேன்சர் பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்தார். அடுத்து திருமண வாழ்க்கையும் தோல்வியாகி விவாகரத்து என்கிற புயலையும் சந்தித்தார். இருந்தாலும் மம்தாவுக்கான் கேரக்டர்கள் என்றால் மம்தாவை மட்டுமே தேடி ஓடுகிறார்கள் இயக்குனர்கள். சில மாதங்களுக்கு முன்பு திலீப்புடன் இணைந்து நடித்த '2 கண்ட்ரீஸ்' படத்தின் 100வது நாள் வெற்றி மம்தாவின் இடத்தை அசைக்க முடியாது என சொல்லாமல் சொல்கிறது..
இப்போது மம்முட்டியுடன் 'தோப்பில் ஜோப்பன்' புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க இருக்கிறார் மம்தா மோகன்தாஸ். இதுவரை பிக் பி, பஸ் கண்டக்டர், ஜவான் ஆப் வெள்ளிமல, வர்ஷம் நான்கு படங்களில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள மம்தாவுக்கு இது அவருடன் ஐந்தாவது படம்.. ஆனால் இந்தப்படத்தில் ஏற்கனவே ஆண்ட்ரியா இன்னொரு கதாநாயகி ஒப்பந்தமாகி இருப்பதால் யார் மம்முட்டிக்கு ஜோடி என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.. எப்படி அமலாபால் நடிக்க வேண்டிய கேரக்டரில் அவருக்கு பதிலாக ஆண்ட்ரியா உள்ளே வந்தாரோ, அதேபோல மம்தா நடிக்கும் கேரக்டரில் ஏற்கனவே வேதிகாவை நடிக்க கேட்டு அவர் மறுத்துவிட்டது உபரி தகவல்.