இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் வருண் தேஜ் நடிக்கும் மிஸ்டர் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீநிவாஸ் மற்றும் தாகூர் மதுவின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் லாவண்யா திரிபதி மற்றும் ஹீப்பா பட்டேல் நாயகிகளாக நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தில் ஹீப்பா பட்டேலுக்கு பதில் நடிகை ரெஜினா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் போன்ற படங்களுக்கு பின்னர் ரெஜினாவிற்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை எனினும் தெலுங்கில் இரண்டாம் நிலை நடிகர்களின் படங்களுக்கான வாய்ப்பு ரெஜினாவிற்கு குவிந்து வருகின்றது. மே 15ல் மிஸ்டர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் ஸ்பெயின் செல்லவுள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளர்களாக மணி சர்மா மற்றும் மிக்கி ஜே மேயர் பணியாற்றுகின்றனர்.