'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
ஜிகிர்தண்டா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் இறைவி. விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா முதலானோர் நடித்துள்ள 'இறைவி' படத்தை ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இறைவி படம் ரெடியாகி பல மாதங்களாகியும் அதன் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டேபோகிறது. எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் இளைவி ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே போகிறது. கடைசியாக இம்மாதம் 20-ஆம் தேதி இறைவியை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள்.
இப்போது கிடைத்த தகவலின்படி 'இறைவி'யின் ரிலீஸை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது ஜூன் 3-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இறைவி வெளியாகவிருக்கும் ஜூன் 3 ஆம் தேதி ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படமும் ரிலீஸாகவிருக்கிறது. அதுமட்டுமல்ல, ரஜினியின் 'கபாலி' படத்தையும் இதே நாளில் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை கபாலி வெளியாவது உறுதியானால் நிச்சயமாக 'இறைவி' ரிலிஸ் மீண்டும் தள்ளிப்போகும் என்பதில் மாற்றமே இல்லை.