தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுமுகம் ஷிரிஷ், சென்ட்ராயன், யோகிபாபு முதலானோர் நடித்திருக்கும் படம் 'மெட்ரோ'. பாபி சிம்ஹா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்காக கானா பாலா பாடிய 'பூமி...' என்று துவங்கும் பாடலை சமீபத்தில் ஹீரோ ஷிரிஷ் வீட்டுக்கே சென்று நடிகர் கார்த்தி வெளியிட்டார். விதார்த் நடித்த நடித்த ஆள் படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி தயாரித்திருக்கிறார். தயாரிப்பு என்று இவரது பெயர் வந்தாலும் மெட்ரோ படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஷிரிஷ்தான்.
கார்த்தியே ஷிரிஷ் வீடு தேடிச் சென்று மெட்ரோ படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டார். ஹீரோவாகிவிட்ட பாபி சிம்ஹா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவும் இதுவே காரணம். அது மட்டுமல்ல, சென்சாரில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிய மெட்ரோ படம் சிறு சிராய்ப்புகளுடன் சான்றிதழ் பெற்றதற்கும் இந்த பின்னணி கைகொடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஹெல்மெட் அணிந்து வந்து பெண்களின் நகைகளை பறித்துச் செல்லும் திருடர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இருப்பதாக கூறி மெட்ரோ படத்தை தடை செய்துவிட்டனர். பிறகு ரிவைசிங் கமிட்டி சென்றது. அங்கும் இதே ரிசல்ட்தான். பின்னர் என்ன நடந்ததோ... ஆட்சேபகரமான அந்த காட்சிகளை நீக்கி 'மெட்ரோ'வுக்கு 'A' சர்டிஃபிக்கேட் வாங்கிவிட்டனர். சென்சார் முடிந்ததை தொடர்ந்து 'மெட்ரோ'வை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் பிசியாகியுள்ளார்கள் படக்குழுவினர்.