டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பீப் பாடல் மூலம் பரபரப்பை கிளப்பிய சிம்பு. தற்போது தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்கள் ஓட்டுப்போட வலியுறுத்தி ஒரு பாடலை வெளியிட இருக்கிறார். தற்போது பாடலை எழுதி முடித்துள்ள அவர் அதற்கு இசை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார். விரைவில் அந்த பாடல் வெளிவர இருக்கிறது. தனது தந்தையை போலவே எதுகை மோனையில் அந்த பாடலை உருவாக்கி வருகிறார். அந்த பாடல் வரிகள் இதோ...
ஓட்டுப்போ வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனால்தான் நம் நாட்டுக்கு இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னன்னு நீ நினப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயேதான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கென்னென்னு நீ இருப்ப
தமிழ்நாட்டோட வளர்ச்சிய நீயேதான் கெடுப்ப
போடமா விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாரு ஒருவாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு