டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஹிருத்திக் ரோஷன், கங்கனா இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு பாலிவுட்டின் பிற பிரபலங்களும் முயற்சித்து வருகின்றனர். நேற்று கூட அக்ஷ்ய், கங்கனாவும், ஹிருத்திக்கும் மோதலை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சோனம் கபூர், கங்கனாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார், அதேசமயம் ஹிருத்திக் தனது நண்பர் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சோனம் கூறியுள்ளதாவது... ''கங்கனா அழகான, கூலான பெண், ஆனால் ஹிருத்திக்கிற்கும், கங்கனாவிற்கும் இடையே என்ன பிரச்னை சென்று கொண்டிருக்கிறது என்று அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.ஹிருத்திக்குடன் நான் வளர்ந்தவள், அவர் ஒரு அற்புதமான மனிதர், சிறிது உணர்ச்சிவசப்படக்கூடியவர், தொண்டுள்ளம் கொண்டவர், அவருடன் நான் பணியாற்றி உள்ளேன். ஒருவருடன் நாம் பயணித்து, நாமும் வளரும் போது அவர்களை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும். இன்றைக்கு நாட்டில் பெண்கள் படும் துன்பங்கள் ஏராளம். ஆகையால் ஒரு பெண்ணாக நான் கங்கனாவிற்கு எனது ஆதரவை தருவேன். இருந்தாலும் ஹிருத்திக் என்னுடைய நல்ல நண்பர் என்று கூறியுள்ளார்.