Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாக்டர் பட்டத்தால் சமூக பொறுப்பு அதிகரிப்பு - நாசர்

07 மே, 2016 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Nassar-honoured-as-doctorate

நடிகர் நாசருக்கு, வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தனது 6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985 ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள் “கல்யாண அகதிகள்” என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார்.


தற்போது நடிகராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், கலைத்துறையில் நாசரின் சேவையை பாராட்டி பிரபல கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக்கழகம், டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.


அதன்படி சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி டாக்டர்.P.S.சவ்ஹான், நடிகர் நாசருக்கு “டாக்டர் பட்டம்” வழங்கி கெளரவித்தார். இந்த விழாவில் வேல்ஸ் பல்கலைகழக நிறுவனர் டாக்டர். ஐசரி கணேஷ் தலைமையேற்றார்.


டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், டாக்டர் பட்டம் என்பது பெருமையான விஷயம், இந்த டாக்டர் பட்டத்தால் எனக்கான சமூக பொறுப்பு அதிகரித்துள்ளது. அதை திறன்பட செய்வேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in