டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள '24' திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் நீளம் பற்றிய ஒரு பேச்சு எழுந்தது. 2 மணி நேரம் 44 நிமிடம் 31 வினாடிகள் நேரம் ஓடும் நேரத்தில் படம் இருந்தால் ரசிகர்கள் ரசிப்பார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இருந்தாலும் படத்தின் நீளத்தைக் குறைக்காமல் அப்படியே வெளியிட்டார்கள்.
ஆனால், நேற்று படம் வெளியான பிறகு பல இடங்களிலும் படத்தின் நீளத்தைப் பற்றி வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும், ரசிகர்களும் குறையாகச் சொன்னார்கள். அதனால் வேறு வழியில்லாமல் படத்தின் நீளத்தை தற்போது 10 நிமிடங்கள் வரை குறைக்க முடிவு செய்துள்ளார்கள். அதற்கான வேலை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பும் சமீப காலமாக இப்படி 2 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை வெளிவந்த படங்கள் வெளியீட்டிற்குப் பின்னர் நீளம் குறைக்கப்பட்டது. படத்தின் காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்வதாகவும் சிலர் குறை தெரிவித்துள்ளார்கள். இருந்தாலும் படத்தின் பிரம்மாண்டத்தில் அந்தக் குறைகளை ரசிகர்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள் என தயாரிப்பு தரப்பு நினைத்தது. அதையும் மீறி தற்போது படத்தின் நீளம் ரசிகர்களுக்குக் குறையாக அமைந்துவிட்டது.