Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'தெறி' ரீமேக் உரிமையை வாங்கும் அக்ஷய் குமார்

07 மே,2016 - 12:17 IST
எழுத்தின் அளவு:

ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் யார் என்று தமிழ் ரசிகர்களுக்கு இப்போது நன்றாகவே தெரிந்திருக்கும். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார். தென்னிந்தியத் திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அக்ஷய் குமார். தமிழ், தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படங்களின் ஹிந்தி ரீமேக்குகளில் நடித்து அங்கும் பெரிய வெற்றி பெற்றார்.


ஏற்கனவே விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தில் நடித்தார். விரைவில் 'கத்தி' படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். இதனிடையே விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தெறி' படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கிவிட்டாராம்.


சில வெளிநாடுகளில் அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த 'ஏர்லிப்ட்' படத்தை விட 'தெறி' படத்தின் வசூல் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமாரின் பட நிறுவனத்தினர் 'தெறி' தயாரிப்பாளருடன் பேசி வருகிறார்களாம். விரைவில் அது பற்றிய பேச்சு வார்த்தை முடிந்ததும் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.


Advertisement
'கஹானி-2' ரிலீஸ் தேதி அறிவிப்பு'கஹானி-2' ரிலீஸ் தேதி அறிவிப்பு ஷாரூக், ஹிருத்திக் உடனான ரேஸிலிருந்து அஜய் விலகல் ஷாரூக், ஹிருத்திக் உடனான ...


வாசகர் கருத்து (1)

sridevi sridevi - Coimbatore,இந்தியா
25 நவ,2016 - 13:06 Report Abuse
sridevi sridevi அதுக்கு நீங்க சத்ரியன் படத்தோட தயாரிப்பாளரை அணுக வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film EN AALODA SERUPPA KAANOM
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film thappu thanda
    • தப்புதண்டா
    • நடிகர் : சத்யா (புதுமுகம்)
    • நடிகை : சுவேதா கய்
    • இயக்குனர் :ஸ்ரீகண்டன்
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in