ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசையை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தன்னுடைய பேனரில் ஜி.வி.யை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதாக வாக்கு கொடுத்தார். அதன் பிறகு அந்தப் படத்தை ஜி.வி.யிடம் கூட சொல்லாமல் ட்ராப் பண்ணினார் ஏ.ஆர்.முருகதாஸ். அதனால் கடும் அப்செட்டில் இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் எப்படியாவது ஹீரோ ஆக வேண்டும் எண்ணத்தில் முதன்முதலில் நடிக்க ஒப்பந்தமான படம் பென்சில். ஜி.வி.யே இசையமைத்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தை மணி நாகராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் நிதிச்சிக்கலில் சிக்கியதால் பென்சில் படம் முடங்கிப்போனது. நீண்டநாட்களாக ரிலீஸ் தள்ளிக் கொண்டேயிருக்கும் 'பென்சில்' படத்திற்கு அண்மையில் மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சொன்ன தேதியில் வெளியாகவில்லை. தற்போது மீண்டும் ஒரு தேதியை அறிவித்துள்ளது பட நிறுவனம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான மே 13ஆம் தேதி 'பென்சில்' படம் வெளியாகும் என்கிறார்கள். இதே தேதியில் 'கோ 2' படமும் ரிலீஸாகிறது. ஏற்கெனவே பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் ரிலீஸாகாமல் போன 'பென்சில்' படம் இந்தமுறை நிச்சயமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அதே நேரத்தில் அந்தப் படத்தின் மீது வாங்கப்பட்ட 40 லட்சம் கடன் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. எனவே இந்தமுறையும் பென்சில் வெளியாவது டவுட்டுதான் என்கிறார்கள்.