‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மகேஷ் பாபு, சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகளுடன் டூயட் பாடியுள்ள பிரம்மோற்சவம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை(மே 7) ஐதராபாத்தில் உள்ள ஜெ.ஆர்.சி வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது. படக்குழுவினருடன் டோலிவுட் பிரபலங்கள் பலருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களில் இரண்டு பாடல்களை படத்திலிருந்து நீக்க இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா முடிவு எடுத்திருக்கின்றாராம். 2 மணி நேரம் 35 நிமிடம் ஓடும் பிரம்மோற்சவம் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் மொத்தம் உள்ள 8 பாடல்களில் இரண்டு பாடல்களை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மே 27ல் திரைக்கு வர காத்திருக்கும் பிரம்மோற்சவம் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என கூறப்படுகின்றது.