பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சுமார் 2200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள ஒரு படம் சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. சூர்யா தனது குடும்பத்தினருடன் தற்போது அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு தியேட்டரில் '24' படத்தின் பிரிமியர் காட்சி நடந்தது. அதில் மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். சூர்யா, ஜோதிகா இருவருமே பிரிமீயர் காட்சிக்கு வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றனர். நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் சூர்யாவும், ஜோதிகாவும் பேசினார்கள். அமெரிக்காவில் '24' படத்தின் பிரிமியர் காட்சியில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி என சூர்யா தெரிவித்தார்.
'24' படத்தைப் பார்த்தவர்கள் படம் பற்றியும், சூர்யாவின் நடிப்புப் பற்றியும் பாராட்டி வருகிறார்கள். தொடர் தோல்விகளால் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு '24' படம் நல்ல திருப்புமுனையைத் தரும் என்கிறார்கள்.