‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பொல்லாதவன் படத்தின் மூலம் வட சென்னையின் இன்னொரு முகத்தை காட்டியவர் வெற்றி மாறன். தற்போது வட சென்னை என்ற பெயரிலேயே தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இதற்காக பல ஆண்டுகள், ஆய்வு, படப்பிடிப்புக்கான களம் தேர்வு என பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார். அவரது ஆஸ்தான நாயகன் தனுஷ்தான் நடிக்கிறார். தனுசும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சமந்தா சென்னை பெண்ணாக இருந்தாலும், தென் சென்னை பொண்ணு. பல்லாவரம்தான் சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே பல்லாவரம் பகுதியில்தான். என்றாலும் வட சென்னை வாழ்க்கை வேறு. அங்கு வாழம் அடிதட்டு பெண்களின் வாழ்க்கை முறையும், பாடி லாங்குவேஜும், பேச்சு வழக்கும் வேறுவிதமானவை. படத்தில் சமந்தா பக்காவான வடசென்னை பெண்ணாக நடிக்கிறார். இதற்காக அவர் வட சென்னை பெண்களுடன் தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கை வாழ்ந்து பார்க்க இருக்கிறார். இதற்காக அவர் 10 நாட்கள் ஒதுக்கி இருக்கிறார். இந்த 10 நாட்களும் அவர் மக்களோடு மக்களாக தங்கியிருந்து தன்னை தயார்படுத்த இருக்கிறார். அந்த இடத்தையும், இந்த தகவலையும் ரகசியமாக வைத்திருக்கிறார் வெற்றி மாறன்.