அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
நடிகை ஷாலினியின் தம்பியும், அஜீத்தின் மச்சானுமான ரிச்சர்ட் சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மலையாளத்தில் அவ்வப்போது படங்களில் நடித்தும் வருகிறார். தமிழில் கடைசியாக இன்று நேற்று என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் அந்தமான் என்ற படத்தில் நடிக்க ஒப்பபந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஹீரோயினாக அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்த மனோசித்ரா நடிக்கிறார். இந்தப் படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இயக்குகிறார்.
எஸ்.பி.எல்.செல்வதாசன் இசை அமைக்கிறார், ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். வையாபுரி, முத்துக்காளை, கானா பாலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இது எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை பாணியிலான சமூக அக்கறை கொண்ட படம். பூமியை காக்க ஹீரோ களத்தில் இறங்கி போராடுகிற கதை என்கிறார்கள்.
படப்பிடிப்பு சென்னை நகரத்திலும், அந்தமான் காடுகளிலும் படமாகிறது. அந்த மானை சேர்ந்த ஏ.கண்ணதாசன் தயாரிக்கிறார். அந்தமா-னுக்கு தன் காதலி மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் ரிச்சர்ட்டுக்கு அங்கு ஒரு தீவில் நாட்டுக்கு எதிரான சதிவலை ஒன்று பின்னப்படுவது தெரிகிறது. அதை எப்படி அவர் தடுக்கிறார் என்கிற ஆக்ஷன் கதை என்கிறார்கள். இந்தப்படம் தனக்கு தனித்த அடையாளத்தை தரும் என்று நம்புகிறார் ரிச்சர்ட்.