பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயலான சன்னிலியோன், படத்துக்குப்படம் ஏதாவது கவர்ச்சி புதுமைகள் செய்து இளசுகளை கிளுகிளுப்பேற்றி வருபவர். ஆரம்பத்தில் சில படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்த அவருக்கு எதிர்ப்பு எழுந்ததால் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சியாக தோன்றி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு இந்தி படத்தில் அவரை கன்னியாஸ்திரி வேடத்தில் நடிக்க கேட்டுக்கொண்டபோது அதை ஏற்க மறுத்து விட்டாராம் சன்னிலியோன்.
காரணம் கேட்டபோது, சினிமா உலகைப்பொறுத்தவரை எல்லா நடிகைகளும் எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கலாம் என்றாலும், என் மீது கவர்ச்சி நடிகை என்ற முத்திரை அழுத்தமாக விழுந்திருப்பதால், நான் அந்த வேடத்தில் நடித்தால் சம்பந்தப்பட்ட மதத்தினர் போர்க்கொடி பிடிப்பார்கள். இதனால் எனக்கு மட்டுமின்றி சம்பந்தப்பட்ட பட இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிரச்னை ஏற்படும் என்று தெளிவு படுத்தினாராம். அதேசமயம் மதம் சம்பந்தமில்லாத வேறு கேரக்டர்கள் கொடுத்தால் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளாராம் சன்னிலியோன்.