ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கபாலி' படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தின் வசூல்தான் அதிக அளவில் வசூலித்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை வைத்துள்ளது. அந்தப் படத்தின் அருகில் கூட வேறு எந்தப் படமும் நெருங்க முடியவில்லை. ரஜினியைப் போல ஆக ஆசைப்படும் நடிகர்களால் இதற்கு மேலும் ரஜினி செய்த வசூல் சாதனையைச் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.
இதனிடையே, 'கபாலி' திரைப்படத்தை உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பாளர் தாணு முடிவு செய்துள்ளாராம். இதுவரை தமிழ்ப் படங்கள் வெளியாகாத நாடுகளில் இருந்து கூட படத்தை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம் என்று வியாபாரம் பேசுகிறார்களாம். மலேசியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் படத்தை சீனாவிலும் மிகப் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
'கேங்ஸ்டர்' கதை என்பது உலகம் முழுவதும் உள்ள சினிமாவிற்குப் பொருத்தமான ஒரு கதை தான். அதில் ரஜினிகாந்தின் ஸ்டைலும், நடிப்பும் வேறு ஒரு தளத்தில் அமைந்துள்ளது என டீசரைப் பார்த்தே பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 'எந்திரன்' வசூல் சாதனையை மிஞ்சும் அளவில் சுமார் 300 கோடி வரை 'கபாலி' மூலம் வசூல் செய்யும் அளவில் படத்தை கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறார்களாம்.