பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் நடித்துள்ள குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான பிரம்மோற்சவம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. வரும் மே 7 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்டர்களும் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாகவே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் துவங்கிவிட்டன. இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ள இப்படத்தை பிவிபி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா, ரேவதி, ஜெயசுதா, சத்யராஜ், நரேஷ், சுபலேக்கா, ராவோ ரமேஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பிரம்மோற்சவம் மே 27ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.