ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழம்பெரும் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் பெயரில் ஆண்டு தோறும் சிறந்த வெற்றிப்பட இயக்குனருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டில் சிறந்த வெற்றிப் படமாக தனி ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு நாகி ரெட்டி விருது வழங்கப்பட்டது. படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது. படத்தில் நடித்த ஜெயம்ரவி உள்ளிட்ட கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.
விஜயா ஹாலில் நடந்த எளிய விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த விருதுகளை வழங்கினார். தமிழறிஞர் அவ்வை சண்முகம், நல்லி குப்புசாமி செட்டி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.