கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ராமகிருஷ்ணா படத்தில் அறிமுகமான ஜெய் ஆகாஷ், லண்டனை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரே படம் தயாரித்தும், இயக்கியும், நடித்தும் படங்களை வெளியிட்டார் எந்தப் படமும் அவரை உயர்த்திப் பிடிக்கவில்லை.
தற்போது ‛நீ யார்' என்ற படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி நடித்துள்ளார். என்.ராதா இயக்கி உள்ளார். லண்டன் மாடல் அழகி ப்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் சுஜித், சுமன் ஷெட்டி, சோனியா சர்மா, தேவந்தி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவராஜ், ஷான்சயு ஒளிப்பதிவு செய்துள்ளனர். யு.கே.முரளி இசை அமைத்துள்ளார்.
இளம் கம்ப்யூட்டர் பொறியாளரான ஜெய் ஆகாஷ், திருமணமாகி மனைவியுடன் லண்டனுக்கு வேலைக்குச் செல்கிறார். விடுமுறை நாளில் மனைவியுடன் சுற்றுலா செல்லும்போது ஒரு விபத்தில் சிக்குகிறார். அதன்பிறகு அவர் தான் யார் என்பதையே மறந்து விடுகிறார். பூவாக இருந்த அவர் புயலாக மாறுகிறார். அந்த விபத்து ஏன் நடந்தது, ஜெய் ஆகாஷ் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாரா என்பதுதான் படத்தின் கதை. முழு படமும் லண்டன் மற்றும் பாரீஸ் நகரில் உருவாகி உள்ளது. நாளை படம் வெளிவருகிறது.