மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
மே 1ம் தேதி காலை 11 மணிக்கு வெளியான 'கபாலி' டீசர் யு டியூப் இணையதளத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த தமிழ் டீசர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'ஐ' பட டீசர் தான் தமிழிலேயே முதலிடத்தைப் பிடித்த டீசராக இருந்து வந்தது. இந்த டீசருக்கு 1 கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல் இதுவரை கிடைத்துள்ளது. இதை 'கபாலி' டீசர் முறியடித்து தற்போது 1 கோடியே 15 லட்சம் பார்வையிடல்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
நேற்று லைக்குகள் எண்ணிக்கையில் 'தெறி' படத்தின் சாதனையை முறியடித்து 3 லட்சத்து 30 ஆயிரம் லைக்குகளுடன் தமிழில் முதலிடத்தைப் பிடித்த டீசர் என்ற சாதனையைப் படைத்தது. இன்று பார்வையிடல் எண்ணிக்கையிலும் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. கமெண்ட்டுகள் எண்ணிக்கையிலும் 19 ஆயிரம் கமெண்ட்டுகளுடன் 'கபாலி' டீசர் தான் முதலிடத்தில் உள்ளது.
'கபாலி' டீசர் இந்திய அளவில் அதிக லைக்குகள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் 'அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆப் அல்ட்ரான்' பட டீசர் 5 லட்சம் லைக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. 'ரக் ஒன் - எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி' 3 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 'கபாலி' டீசர் 3 லட்சத்து 31 ஆயிரம் லைக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எப்படியும் 'ஸ்டார் வார்ஸ்' டீசரை முறியடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது உறுதி.
உலக அளவில் உள்ள திரைப்படம் சார்ந்த ரசிகர்களையும், பத்திரிகைகளையும் இந்த யு டியூப் சாதனைகளால் தன் பக்கம் அவர்களைத் திருப்ப வைத்துள்ளது 'கபாலி' டீசர்.