ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ஆண்டு வரை அதிகமான படங்களில் பாடி வந்த கானா பாலாவுக்கு இந்த ஆண்டு பாடல்கள் குறைந்து விட்டன. இந்நிலையில், பாண்டியோட கலாட்டா தாங்கல என்ற படத்தில் தற்போது ஒரு அட்வைஸ் பாடலை பாடியிருக்கிறார் பாலா. இந்த வருடத்தில் எழுதி, பாடி, விசுவலில் அவர் நடித்துள்ள முதல் பாடல் இதுதானாம்.
இது பற்றி கானா பாலா கூறுகையில், இந்த பாண்டியோட கலாட்டா தாங்கல படத்தில், மாற்று போனு மாடனாகிப்போச்சு வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் டிரன்டாதான் ஆச்சு -என்றொரு பாடல் எழுதியிருக்கிறேன். வழக்கமாக என்னை லவ் பாடல், கலாய்க்கிற பாடல், ஒயின்ஷாப் பாடல்கள் பாடத்தான் என்னை கூப்பிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் அட்வைஸ் சொல்வது போன்ற ஒரு பாடலை எழுதி பாடி நடிக்க சொன்னார்கள். கண்டிப்பாக இளைஞர்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கருத்துள்ள ஒரு பாடலை எழுதினேன்.
அதோடு, இது ரீமிக்ஸ் பாடலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் கேட்டுக்கொண்டதால், பல பாடல்களை பரிசீலனை செய்து கடைசியாக வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது -என்ற பாடலின் டியூனை ரீமிக்ஸ் செய்தோம். இந்த பாடலுக்காக பல சரணங்களை எழுதிக்கொடுத்தேன். அதில் இரண்டு சரணங்களை இயக்குனர் தேர்வு செய்தார். இந்த ஆண்டு நான் பாடியதில் எனக்கு மிகவும் புடித்த பாடல் இது. நாளை முதல் நான் பங்கேற்கும் மேடைகளில் இந்த பாடலை பாடப்போகிறேன் என்கிறார் கானா பாலா.