ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு. சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திரிஷா இல்லன்னா நயன்தாராவுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தின் டைட்டீல் ஆக்சன் படம் போன்று தெரிந்தாலும் முழுநீள காமெடி கதையில் இப்படம் தயாராகியுள்ளதாம்.
இந்த படத்தில் காமெடி நடிகர் சார்லியும், நிரோஷாவும் ஜி.வி.பிரகாஷின் பெற்றோர்களாக நடித்துள்ளார்கள். பருத்திவீரன் சரவணன் நாயகி ஆனந்தியின் தந்தையாக நடித்துள்ளார். இவர் நைனா என்றொரு வேடத்தில் டானாக நடித்திருக்கிறார். அந்த வகையில், டான் கெட்டப்பில் மிரட்டலாக நடித்திருக்கும் சரவணனுடன் நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோரும் நடித்திருப்பதால், அவரது டான் வேடம் க்ளைமாக்சில் பக்கா காமெடி கேரக்டராக மாறி விடுகிறதாம். ஆக, பருத்தி வீரனுக்குப்பிறகு இந்த படம் சரவணனுக்கு நல்லதொரு பெயரை வாங்கித்தரும் என்கிறார்கள்