‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பத்து வயது சிறுமியாக ரஜினி அங்கிள் என அழைத்தபடி 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் நடித்த மீனா தான். பின்னாளில் அதே அங்கிளை எஜமான் படத்தில் 'மாமா' என அழைக்கும் ஜோடியாகவும் மாறினார். மீனா இன்னும் கொஞ்ச நாள் பீல்டில் இருந்திருந்தால் ரஜினிக்கு அம்மாவாக நடித்து புதிய சாதனை ஒன்றையும் படைத்திருப்பாரோ என்னவோ.. இதுபோன்ற சில அதிசயங்கள் சினிமாவில் எப்போதாவது அரிதாகத்தான் நடக்கும்.. ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் அதிசயமாக மலையாள சினிமாவில் தனது தந்தையின் காதலியாக நடித்த நடிகைக்கு அண்ணனாக நடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மலையாள நடிகர் முரளிகோபி..
மலையாள சினிமாவில் கதாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர் தான் முரளி கோபி.. இவர் தற்போது 'பாவா' என்கிற படத்தில் நடித்துள்ளார். 'பாப்பன குறிச்சும் வர்க்கிய குறிச்சும்' என்பதன் சுருக்கம் தான் 'பாவா'. பாப்பனாக அனூப் மேனனும் வர்க்கியாக முரளிகோபியும் நடித்திருக்கிறார்கள். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இருவருமே 80 வயதான பெரியவர்களாக நடித்துளர்கள். இதில் முரளிகோபியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபல அம்மா நடிகையான கேபிஏசி லலிதா ('காதலுக்கு மரியாதை'யில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர்).
இனிதான் காமெடியே இருக்கிறது.. மறைந்த மலையாள ஹீரோவான பரத்கோபியின் மகன் இந்த முரளி கோபி.. 1978ல் 'கொடியேட்டம்' என்கிற படத்தில் பரத்கோபியின் ஜோடியாக நடித்திருந்தார் கேபிஏசி லலிதா. அப்போது முரளி கோபி ஆறுவயதான சிறுவன்.. இப்போது காலம் உருண்டோடி 69 வயதான கேபிஏசி லலிதா, 44 வயதே ஆன முரளி கோபிக்கு தங்கையாக நடித்துள்ளார். ஒரு நடிகருக்கு காதலியாக நடித்துவிட்டு, அவரது மகனுக்கு அம்மாவாக நடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் அக்காவாக கூட நடித்துள்ளார்கள் சிலர். ஆனால் ஜோடியாக நடித்த ஹீரோவின் மகனுக்கு தங்கையாக நடிக்கிறார் என்றால் அதுதான் சினிமா.