ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹாலிவுட் கலைஞர்களை தமிழ்ப்படங்களில் பணியாற்ற வைத்து படங்களின் தரத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்திக்காட்ட கோலிவுட் கலைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், ரஜினி, கமல் மற்றும் டைரக்டர் ஷங்கர் படங்களில் ஹாலிவுட்டின் மேக்கப், காஸ்டியும், ஸ்டன்ட் கலைஞர்கள் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது, ரஜினியின் 2.ஓ மற்றும் சிவகார்த்திகேயனின் ரெமோ ஆகிய படங்களில் ஹாலிவுட் பிரபல மேக்கப் மேனான ஷான்புட் பணியாற்றி வருகிறார். இவர் அவதார் படத்தின் மேக்கன்மேன் ஆவார்.
தற்போது இந்த ஷான் புட், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'ஏஏஏ' படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கும் சிம்புவை மூன்று கோணங்களில் வடிவமைக்கப் போகிறார்களாம். மேலும், மூன்று வேடங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்க, ஒவ்வொரு கெட்டப்பாக நடிக்கப் போகிறாராம் சிம்பு. அப்படி அவர் நடிக்கப்போகும் கெட்டப்புகள் தற்போது மேக்கப்மேன் ஷான்புட் மூலம் வடிவமைக்கப்பட்டு வருகிறதாம்.