பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
சூர்யா நடித்த 24 படத்தின் விளம்பரங்களில், சூர்யா நடித்த பெரிய பட்ஜெட் படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் திரைவாழ்க்கையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் என்ற விளம்பரத்தோடு மே 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது '24' திரைப்படம். சமந்தா, நித்யாமேனன் இரண்டு பேரும் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சில்லுனு ஒரு காதல் படத்துக்குப் பிறகு சூர்யா நடித்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது 24 படத்துக்குத்தான். இப்படத்தின் டீஸர், டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
24 படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தின் புரமோஷன்களை அதிரடியாக செய்வதால், 24 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 24 படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது என்றாலும், குறிப்பிட்ட சில தியேட்டர்களில் 24 படத்திற்கான முன்பதிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே துவங்கிவிட்டது. அதோடு, சத்யம் சினிமாஸில் 'பிரீ புக்கிங்' கடந்த வாரமே துவங்கி, முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே தீர்ந்துவிட்டன. உலகமெங்கும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் '24' திரைப்படம் வெளியாகவிருக்கிறது.