பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் கொடரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு இணையாக, மோகன்லால் டான்-ஆக நடிப்பதாகக் கூறப்படுகின்றது. மோகன்லாலைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் ஜெயராம் தெலுங்கு சரித்திர படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம். இயக்குனர் அசோக் இயக்கும் பாஹ்மதி எனும் சரித்திர படத்தில் அனுஷ்கா முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இயக்குனர் அசோக் இப்படத்தில் ஜெயராம் ஏற்கவிருக்கும் கதாபாத்திரம் குறித்து கூறுகையில், அக்கதாபாத்திரம் பிடித்துப் போகவே, மகிழ்ச்சியுடன் இப்படத்தில் நடிக்க ஜெயராம் சம்மதம் தெரிவித்தாராம். யுவி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.