விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
அமிதாப்பச்சன், அக்ஷ்ய்குமார், அர்ஜூன் ராம்பால், சுஷ்மிதாசென் ஆகியோரது நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'ஆன்கென்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராக உள்ளது. இப்படத்தில் அக்ஷ்ய்க்கு பதிலாக அந்த ரோலில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்தது, ஜானும் நடிக்க இருந்தார், ஆனால் இப்போது ஆன்கென்-2வில் இருந்து ஜான் ஆபிரஹாம் விலகியுள்ளார்.
இதுப்பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல் இது... அதாவது 'வெல்கம் பேக்' படத்தின் வெற்றிக்கு பிறகு ஜானும், இயக்குநர் அனீஸ் பாஸ்மியும் இணைந்து நடிக்க தயாராக உள்ளார்களாம். பிறகு என்ன பிரச்னையாம். 'வெல்கம் பேக்' படத்திற்கு பிறகு ஜான் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டாராம். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் கெளரங் தோஷி மறுத்துவிட்டார். இதனால் இப்படத்திலிருந்து ஜான் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.