ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த மூத்த நடிகர் அக்னினேனி நாகேஸ்வர ராவ் தனது மகன் நாகார்ஜுனா, பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகிலுடன் இணைந்து நடித்த மனம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மூன்று ஜோடிகளின் காதல் கதையை ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்தி இயக்குனர் விக்ரம் குமார் இயக்கிய மனம் திரைப்படத்தில் நாகேஸ்வர ராவ்வின் யதார்தமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதுவே அவரது கடைசி படமாகவும் அமைந்தது. இப்படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் சூர்யா நடிப்பில் இயக்கியுள்ள 24 எனும் சயின்ஸ் பிக்சன் தமிழ் மற்றும் தெலுங்கில் மே 6ல் திரைக்கு வர தயாராகி வருகின்றது.
இப்படத்தின் புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விக்ரம் குமார், மனம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகக் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, மனம் ஹிந்தி ரீமேக் குறித்து விக்ரம் குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றாராம். 24 படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் மனம் ஹிந்தி ரீமேக் குறித்த முழுதகவலும் வெளியாகும் என விக்ரம் குமார் கூறியுள்ளார். மேலும் மனம் தமிழ் ரீமேக்கிற்காகவே சூர்யாவை அனுகியதாகவும், தனது “24” படத்தின் கதை சூர்யாவிற்கு பிடித்துப் போக தமிழ் மனம் ரீமேக் கைவிடப்பட்டதாகவும் விக்ரம் கூறியுள்ளார்