மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை 28 படத்தில் பிரபலமானவர் நிதின் சத்யா, அதன் பிறகு தோழா, சத்தம் போடாதே, ஜன்னல், ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முன்வரிசைக்கு வர முடியவில்லை. தற்போது பாண்டியோட கலாட்டா தாங்கல என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். பாண்டியோட கலாட்டா தாங்கல படத்தை எஸ்.டி.குணசேகரன் இயக்கி உள்ளார். நிதின் சத்யாவுடன் ரேஷா, மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர்.
“இது திகிலும், காமெடியும் கலந்த படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் படம். என் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். எனது இரண்டாவது இன்னிங்சை இந்தப் படத்தின் மூலம் தொடங்கியிருக்கிறேன் என்று கூறலாம். சென்னை 28 பார்ட் 2விலும் நடித்து வருகிறேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், தோல்வி அடைந்திருந்தாலும் என் உழைப்பை சரியாக கொடுத்திருக்கிறேன். சினிமா ஒரு மேஜிக் எந்த நேரத்திலும், யாரையும் உயரத்தில் வைக்கும். எனக்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் என்கிறார் நிதின் சத்யா.