‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் 'அதிரடிப்படை'. இந்துலேகா மோகன், டிட்டு வின்செண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தை அஸ்வினி குமார் இயக்குகிறார். ஸ்ரீகுமார், தேவிகா நடிக்கிறார்கள். பென்னி அசம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தேவதாஸ் இசை அமைக்கிறார். இது டி.வி. நிருபர்களின் காதல் கதை என்கிறார் இயக்குனர் அஸ்வினி குமார்.
அவர் மேலும் கூறியதாவது: ஹீரோ ஸ்ரீகுமாரும், தேவிகாவும் வெவ்வேறு சேனல்களில் நிருபராக வேலை செய்கிறவர்கள். ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்துக் கொள்ளும் இவர்கள் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். தீவிரவாதிகள் பற்றி செய்தி சேகரிக்க செல்லும் தேவிகாவை தீவிரவாதிகள் கொன்று விடுகிறார்கள். காதலியை கொன்றவர்களை பழிவாங்க ஸ்ரீகுமார் அந்த தீவிரவாத கூட்டத்தில் சேர்கிறார். ஆனால் போலீசோ அவரையும் தீவிரவாதிகள் குரூப்பில் சேர்த்து அவரை என் கவுண்டர் செய்ய திட்டமிடுகிறது. ஸ்ரீகுமார் காதலியை கொன்றவர்களை பழிவாங்கினாரா, போலீசிடமிருந்து தப்பித்தாரா என்பது கதை. காதல் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. சென்னை மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. என்கிறார் அஸ்வினி குமார்.