மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
சூர்யா சொந்தமாகத் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள '24' திரைப்படம் நாளை மறுநாள் மே 6ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை சூர்யா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் முதல் முறையாக நடித்ததோடு மட்டுமல்லாமல், அதில் ஒன்றில் வில்லனாகவும் நடித்துள்ளார். கமல்ஹாசன், விக்ரம் போன்றே படத்திற்குப் படம் தன்னை மாறுபட்ட கதாபாத்திரங்களில் காட்டி நடிக்க சூர்யா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனாலும், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த '7ம் அறிவு, மாற்றான், அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. இடையில் வந்த 'சிங்கம் 2' படம் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் தமிழில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனது நடிப்பின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார் சூர்யா. '24' படம் வெற்றியடைந்தால் தெலுங்கில் மட்டுமே சுமார் 50 கோடி வரை வசூலித்துக் கொடுக்கும் என்கிறார்கள்.
சயின்ஸ் பிக்ஷன், விக்ரம் குமார் இயக்கம், ஏ.ஆர்.ரகுமான் இசை, சமந்தா, நித்யா மேனன் இப்படி பல பாசிட்டிவ்வான விஷயங்களுடன் களமிறங்கும் சூர்யாவுக்கு இந்த முறை '24' படம் ஏமாற்றாது என்றே சொல்கிறார்கள். எதிர்பார்த்தபடி படத்திற்கு வரவேற்பு இருந்தால் சூர்யாவும் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடுவார் என்கிறார்கள்.