சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இந்தியத் திரையுலகில் வேறு எந்த திரைப்படமாவது இப்படி ஒரு அதிரடி சாதனையை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழ்த் திரையுலகத்தில் இனி அஜித்தோ, விஜய்யோ, சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கெல்லாம் ஆசைப்பட்டு எந்த பேட்டியும் கொடுக்கக் கூடாது என ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.
இணைய உலகில் என்னமோ தாங்கள்தான் ஆளுமை செய்வதாக அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் கூவிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பார்வையிடுவதும், லைக் செய்வதும் உணர்வு பூர்வமாக வரவேண்டியது, அது கபாலி டீசருக்குத் தானாகவே வருகிறது. அவர்களைப் போல நாங்கள் யாரும் உருவாக்குவதில்லை. டீசரின் கீழ் உள்ள கமெண்ட்டுகளைப் படித்தாலே அது தெரியும் என்கிறார் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர்.
நேற்று இரவு 9 மணியளவில் 3 லட்சம் லைக்குகளைக் கடந்த கபாலி டீசர் இன்று காலை 9 மணியளவில் 1 கோடி ஹிட்ஸைக் கடந்திருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அதுவும் மூன்று நாட்களுக்கும் குறைவான மணி நேரத்தில் கபாலி டீசரின் இந்த சாதனை மிகவும் வியப்பாகப் பார்க்கப்படுகிறது.
சல்மான்கான், ஷாரூக்கான், ஆமீர்கான் என கான்களும், மகேஷ்பாபு, பவன்கல்யாண், ராம்சரண் என தெலுங்குவாலாக்களும், தமிழில் அஜித், விஜய், சூர்யா என யாரும் சாதிக்காத ஒரு சாதனையை 60 வயதைக் கடந்த ரஜினிகாந்த் நிகழ்த்துகிறார் என்றால் அது அவரால் மட்டுமே முடியக் கூடிய ஒரு விஷயமாக விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.