ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ, டிஸ்யூம், 555 போன்ற படங்களை இயக்கியவர் சசி. இவர் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் என்ற படத்தை இயக்கினார். அப்படம் 555 என்ற படத்தை இயக்கி வீழ்ந்து கிடந்த அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. அதையடுத்து உதயநிதி நடிப்பில் சசி ஒரு படம் இயக்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படவேலைகளில் இறங்கியிருக்கிறார் சசி.
மேலும், இந்த படத்தை தயாரிக்கயிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ், இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு, என்னதான் சித்தார்த் சீனியராக இருந்தபோதும், ஜி.வி.பிரகாஷின் மார்க்கெட் கருதி, அவரது பெயரை முதலாவதாக குறிப்பிட்டு அதற்கடுத்து சித்தார்த்தின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்திற்கான கதாநாயகி தேடல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.