பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
'கபாலி' படத்தின் டீசர் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் வெளியிடப்பட்ட பிறகு அந்த டீசருக்கான 'ரியாக்ஷன்கள்' என எண்ணற்ற வீடியோக்கள் குவிந்து வருகிறது. படத்திற்கு விமர்சனம் செய்வதைத் தவிர்த்து சில ஆர்வக் கோளாறு யு டியூப் விமர்சகர்கள் டிரைலர்களுக்கும், டீசர்களுக்கும் விமர்சனம் செய்ய ஆரம்பித்து தங்களை ஏதோ அதி மேதாவிகள் போலவும், சினிமாவைக் கரைத்துக் குடித்தவர்கள் போலவும் விமர்சனம் என்கிற பெயரில் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த 'ரியாக்ஷன்கள்' என்பது சுவாரசியமாகவும், ரசிக்க வைக்கும்படியான வீடியோக்களாகவும் இருக்கிறது.
நேற்று நாம் பார்த்தவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இப்படி 'கபாலி டீசர் ரியாக்ஷன்'களை பலர் பகிர்ந்துள்ளார்கள். பலருக்கு அதில் தமிழ் மொழி தெரியாது என்பதுதான் அதில் உள்ள சுவாரசியம். அவர்களுக்கு ரஜினிகாந்தைக் கூட அதிகம் தெரிந்திருக்குமா என்பதும் தெரியாது. பலர் 'கபாலி' படத்தைக் கூட பாலிவுட் படம் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். பின்னர், நம் ரசிகர்கள் அவர்களுடைய கமெண்ட் பக்கத்தில் இது தமிழ்ப் படம் என்பதை விளக்கியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் ஒரு இளைஞனும், இளைஞியும் பங்கு பெற்றுள்ள அந்த வீடியோ ரியாக்ஷன் நிகழ்ச்சிகளில் டீசரை முதல் முறையாக நேரடியாகப் பார்த்து அதற்கு அந்தத் தொகுப்பாளர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதையும், அதைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் ஒரு 'லைவ்' ஆன நிகழ்ச்சியாக உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்க வைக்கிறது.
வேறு எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் இந்த அளவிற்கு 'டீசர் ரியாக்ஷன்கள்' இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு யு டியுபில் கடந்த இரண்டு நாட்களாக 'கபாலி' மயமாகவே உள்ளது. அந்த ரியாக்ஷன் நிகழ்ச்சிகளையும் சேர்த்தால் 'கபாலி' டீசர் மற்றும் அது தொடர்பான வீடியோக்களின் ஹிட்ஸ்களின் எண்ணிக்கை எங்கேயோ போய்விடும்.