பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. ரஜினி டான் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரடொக்ஷ்ன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. மே 1ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்திய மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பட டீசர் இந்திய அளவில் சாதனை படைத்தது. இரண்டுநாளில் சுமார் 80 லட்சம் பேர் கபாலி டீசரை பார்த்துள்ளார்கள்.
கபாலி படம் ரம்ஜான் பண்டிகையின் போது வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் தான் சல்மானின் சுல்தான் படமும் வெளிவர இருக்கிறது. பொதுவாக ரஜினி படம் பாலிவுட்டிலும், சல்மான் படம் தமிழிலும் டப்பாகும். ஒருவேளை கபாலி படம் ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாகும் என உறுதியாக அறிவிக்கப்பட்டால் அன்றையதினம் சல்மானும், ரஜினியும் மோதும் சூழல் உருவாகும் என்பது மட்டும் திண்ணம்.