தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி, முத்தக்காட்சியில் நடிக்க வெட்கப்பட்டதாக கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் அசாரூதினின் வாழ்க்கை ஹிந்தியில் அசார் என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். அவரின் காதலி சங்கீதா பிஜ்லானியாக நர்கீஸ் பக்ரி நடிக்கிறார். தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
இந்நிலையில் நர்கீஸ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''இந்தப்படத்தில் நிறைய முத்தக்காட்சிகள் இருப்பது எனக்கு தெரியாது. முத்தக்காட்சியில் நடித்தபோது நிறைய ரீ-டேக் வாங்கினேன். மேலும் இதுபோன்றதொரு காட்சியில் நடிக்க மிகவும் வெட்கமாக இருந்தது. அதேசமயம் இம்ரான் போன்ற நடிகர்களுடன் நடிக்கும்போது அதுபோன்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.